இதை சாப்பிடுங்க, தைராய்டுக்கு மட்டுமில்ல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்

தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியைக்குறிக்கும் பெயர் ஆகும். தேங்காய்பூவில்,தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது. இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும்,பஞ்சு போல் அதன் உருவம் இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும். வாருங்கள் அதன் நமைகளைக் காண்போம்.

தைராய்டு :

நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.கசப்பு மருந்து பல உண்டிருப்பீர்கள்.இது ஒரு சுவையான இனிப்பு மருந்து.

நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி

தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச்சத்து இருக்கிறது.இது நோய் எதிர்ப்பு சக்தியை இருமடங்கு அதிகரிக்கும். க்ளைமேட் சேஞ்சிங் எனும் பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பைத் தேங்காய் பூவை உண்பதன்மூலம் பெறலாம்.

ஜீரண சக்திக்கு :

உங்களுக்கு செரிக்கும் சக்தி குறைவாக இருந்தால் அதற்குத் தேங்காய்ப் பூ சிறந்த தேர்வாக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குண‌மாக்குகிறது.

சர்க்கரை வியாதிக்கு :

தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டி அதன்மூலம் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

இதயம் :

இதயம்

இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்து, ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து இந்த தேங்காய்ப்பூ உங்களை பாதுகாக்கும்.

ஆற்றலைத் தரும் :

மன அழுத்தம்

ஸ்ட்ரெஸ்ல இருக்கேன் என்று மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் அதிகம் அவதிப்படிகிறார்கள் அல்லவா? அவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு அன்று முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு வியத்தகு விந்தை தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அதுதான் நிஜம்.

புற்று நோய் :

கேன்சர்

ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாத்து அதன் மூலம் புற்று நோய் வராமல் காக்கிறது.

உடல் எடை :

உடல் எடையை கட்டுப்பாட்டோடு வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரியே இருப்பதால் உடல் எடை அதிகரிக்காது.தேங்காய்ப்பூ வளர்சிதை மாற்றத்தை தூண்டும் தன்மை கொண்ட‌தால் கொழுப்பு சேராமால் வேகமாக உடல் எடை குறையும்.

சிறுநீரகம் :

சிறுநீரகம்

சிறுநீரகத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. சிறுநீரகத் தொற்று நோய்களைக் குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை பெற உதவுகிறது.

முதுமை :

முதுமை

தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சருமத்தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.தேங்காய் பூ உண்ணுங்கள், தேங்காய் சீனிவாசன் போல முதுமையடைய மாட்டீர்கள்!