தொப்பையை குறைக்க இதை மட்டும் குடிங்க

உடல் எடை அதிகரிப்பானது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் மிக முக்கிய காரணியாகும். எடை அதிகரிப்பை குறைப்பதற்காக பலவித டயட் முறைகள் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது தான் கடினமான வேலை. ஏனெனில் தற்போதைய நவீன டயட் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

எனவே உடல் எடையைக் குறைக்க நினைத்தால் இயற்கை வழிகளை குறிப்பாக பக்க விளைவுகள் இல்லாத வழிகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். பொதுவாக நிரந்தரமாக உடல் எடையைக் குறைக்க முயலும் போது, அதன் பலன் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அதற்கு சற்று பொறுமைக் காக்க வேண்டும்.

இங்கு உடல் எடையைக் குறைக்க சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், உடல் எடை ஒரே மாதத்தில் அதிகமாக குறைவதற்கு நாம் செய்ய வேண்டியதை என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

சுக்கு, கருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து தனித்தனியாக நன்கு பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் வைத்துவிட்டு, அரை ஸ்பூன் சுக்கும், ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தினையும் போடவும். பின்பு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சூடு பண்ணவும்.

பின்பு வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சூடாக சற்று குடிக்க வேண்டும்.இதனை இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு குடித்து வந்தால் உடல் எடையினை ஒரே மாதத்தில் 15 கிலோ வரை வேகமாக குறைக்கலாம்.