பேரிட்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க!

அன்றாடம் காலையில் எழுந்ததும் அவரவர்க்கும் ஆயிரம் வேலைகள் இருக்கத்தான் செய்யும். சிலர் எழுந்ததும் மொபைலைக் கையில் எடுத்து சாட் செய்வார்கள். சிலர் எழுந்ததும் எழாமலும் பெட்காபி குடிப்பார்கள். சிலர் அவசர அவசரமாக எழுந்து அலுவலகத்துக்கு செல்வார்கள். இப்படி பலர் பலவகையான செயல்களைச் செய்வார்கள். இந்த அவசர வேலைகளின் போது நிச்சயம் நாம் அன்றைய தினத்தின் காலை உணவை தவிர்த்து விடுவோம் அல்லது வெறும் பிரட்,ஜாம் மட்டுமே சாப்பிடுவோம்.

ஆனால், காலையில் சாப்பிடுவதற்கு முன்னர் வெறும் 3 பேரீச்சைப் பழங்களை 1 வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் என்ன விதமான வியக்கத்தக்க விந்தைகள் உங்கள் உடலில் நடக்குமென்று தெரியுமா..? உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் ஒரே வாரத்தில் ஏராளமான மாற்றங்கள் நடக்கும். வாங்க, பேரீச்சை பழத்தால் என்னென்ன பெரிய மாற்றங்கள் நடக்குதுன்னு பார்ப்போம்.

வளைகுடா நாடுகள் தந்த வளமான பழம்..!

பேரிட்சை பழம்

பொதுவாகவேன் திரைகடல் ஓடி திரவியம் தேடும் நண்பர்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்றால் பேரீச்சை வாங்கி வருவது இயல்பு. நம்ம ஊரில் இருக்க மா, பலா, வாழையைப் போன்று அவங்க ஊரில் இந்த பேரீச்சை ரொம்ப பிரபலமானது. இதைச்சுற்றி மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளதற்கு காரணம் இவற்றின் பயன்கள்தான். மருத்துவம்,உணவு,அழகு பொருட்கள் போன்ற எண்ணற்ற துறைகள் இந்த பேரீச்சையில் முதலீடு செய்திருக்கின்றன‌.

ஒரு வாரம்- 3 பேரீச்சை..!


அப்படி என்ன ஒரு வாரத்திற்குள் மாறிவிட போகுதென்று எண்ணுபவர்கள் இதன் மகிமையை முதல்ல தெரிஞ்சிக்கோங்க. பழைய இரும்புக்குப் பேரீச்சம் பழம் கொடுக்கும் வழக்கத்தை அறிந்தவர்கள் நாம். அதாகப்பட்டது அவர் இரும்பை எடுத்துக்கொண்டு இரும்புச்சத்து மிக்க பேரிச்சையை நமக்கு அளிக்கிறார். மற்ற உணவுகளைக் காட்டிலும் இதில் அதிக அளவில் தாதுக்களும்,ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

100 கிராம் பேரீச்சையில் உள்ள சத்துக்கள் இதோ… பொட்டாசியம்- 696 mg நார்சத்து – 6.7 mg மெக்னீசியம் 54 mg கால்சியம் 64 mg பாஸ்பரஸ் 62 mg புரதம் 1.81 கிராம் இரும்புச்சத்து 5.7%

முதுமைத் தோற்றத்தைப் போக்க..!

பேரிட்சை பழம்
இளமையில் முதுமைத்தோற்றம் வராமல் தடுக்கும் இதன் சக்தி தெரிந்தால் இனி இதை விடவே மாட்டிங்க! ஃபேஸ் ஆப் பயன்படுத்தாமலே முதுமைத் தோற்றம் வருகிறதா? முகம் முழுக்க சுருக்கங்களாக உள்ளதா..? இதைச் சரிசெய்ய பேரீச்சை வைத்தியம் போதும்ங்க. தினமும் இதை தொடர்ந்து சாப்பிட்டாலோ அல்லது முகத்தில் தடவினாலோ முகத்தின் சுருக்கங்கள் மறைந்து விடும்.

நோய்களுக்கு நோ சொல்ல..!

பேரீச்சையில் உள்ள செலினியம், மக்னீஸ் மற்றும் மெக்னீசியம் உடலுக்கு அதிக வலிமையை தந்து நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதியாக கட்டமைக்கிறது. இதனால் உங்களுக்கு நோய்கள் எதுவும் வராமல் தடுக்கும். எனவே, மறந்திடாம‌ 3 பேரீச்சைகளை காலையில சாப்பிடுங்க. நோகாம நோய்களுக்கு நோ சொல்லுங்க.

சிந்தனைச் சிற்பி மூளைக்கு..!

பலருக்கு மூளை திடீரென்று அதிக சோர்வாக இருக்கும். இதோடு சேர்த்து தூக்கமும் பயங்கரமாக வர தொடங்கும். வெறும் வாரத்திற்கு 3 பேரீச்சையை சாப்பிட்டு வாங்க, அப்புறம் பாருங்க ஜெட்டு வேகத்துல உங்க வேலையெல்லாம் சிறப்பா நடக்கும்.சிந்தனைச் சிற்பி சயனைடு குப்பினு எல்லோரும் பாராட்டுற மாதிரி ஆகிடுவீங்க.

உடல் ‘பெருத்த’ ஏமாற்றம் நீக்க..!

உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பேரீச்சை ஓர் உன்னத‌ மருந்து. காலையில் 3 பேரீச்சைகளை சாப்பிடுவதால் சீக்கிரமே உடல் எடைகுறைந்து ‘பெருத்த’ ஏமாற்றத்திலிருந்து பெருத்த மாற்றம் ஏற்படும். அதோடு வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும்.

செரிமான பிரச்சினை சரியாக‌..!

நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினை உண்ணும் உணவு செரிக்காமல் இருப்பது. இதனோடு இலவச இணைப்பாக மலச்சிக்கலும் வரத்தொடங்கும். ஒரு வாரத்திற்கு வெறும் 3 பேரீச்சை சாப்பிட்டு பாருங்க, இந்தச் சிரமங்கள் எல்லாமே சில‌நொடிப் பொழுதுல காணாம போயிடும். அதோடு சேர்த்து வயிற்றுக் கோளாறுகள் எல்லாவற்றையும் சரிசெய்துவிடும்.

ஆண்கள் செயல் புயலாய் மாற..!

பேரீச்சை எனர்ஜி ட்ரிங்க் குடிப்பதன் மூலம் புத்துணர்ச்சி பெற்று இல்வாழ்க்கை (தாம்பத்திய வாழ்க்கை) நல்வாழக்கையாய் அமையும்.

பேரீச்சை எனர்ஜி ட்ரிங் செய்யத் தேவையான பொருட்கள்

• தேன் அரை ஸ்பூன்

• ஏலக்காய் பொடி சிறிது

• பேரீச்சை 1 கையளவு

• ஆட்டுப்பால் அரை கப்

செய்முறை

முதலில் பேரீச்சையை அரைத்து கொண்டு ஆட்டு பாலுடன் கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் தேன் மற்றும் ஏலக்காய் பொடி சிறிது சேர்த்து நன்றாகக் கலந்து குடித்தால் ஆண்களின் செயல்திறன் படுக்கையில் அதிகரிக்கும்.

புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க‌..!

நம் உடலில் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்க கூடிய ஆற்றல் இந்த பேரீச்சைக்கு உள்ளது. தினமும் 3 பேரீச்சையை சாப்பிட்டுவர நம்மைப் புற்றுநோயில் இருந்து காத்துக் கொள்ளலாம். அதோடு பெருங்குடலில் சேர்ந்துள்ள அழுக்குகளையும் இது சுத்தம் செய்ய கூடிய ஆற்றல் கொண்டதாம். எனவே,பெருங்குடல் புற்றுநோயும் உங்களுக்கு வராது.

கர்ப்பகாலத்து கண்கண்ட மருந்து ..!

பொதுவாகவே கர்ப்ப காலத்தில் இருக்க கூடிய பெண்கள் இரும்புச்சத்து அதிகம்கொண்ட உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.உள்ளே இருக்கும் குழந்தைக்குச் சேர்த்து உண்ணவேண்டுமலல்லவா? பிரசவத்திற்கு 4 வாரத்திற்கு முன்பிலிருந்து பேரீச்சைகளை எடுத்து கொண்டால் பிரசவம் சுகப்பிரசவமாவ‌தற்கு இது உதவும்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமா..?

உங்கள் இதயம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நீண்ட காலம் செயல்பட வேண்டுமென்றால் அதற்கு இந்த பேரீச்சை வைத்தியம் பெருமளவில் பயன்படும். குறிப்பாகக் குருதியில் இருக்க கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி மாரடைப்பு, இதய நோய்கள், ரத்த நாளங்கள் பாதிப்பு ஆகியவற்றில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

அனீமியாவால் அவதியா..?

உடல்முழுக்க எதோ வெளிறிப்போய் இருந்தால் அதுதான் அனீமியா எனும் ரத்த சோகைக்கான அறிகுறியாகும். இந்த பிரச்சினையில் இருந்து உங்களைக் காக்க பேரீச்சை அதிகம் உதவுகிறது. தினமும் 3 பேரீச்சை சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை வெயிலில் வைத்த வெண்ணெயாய்க் காணாமல் போகும்.

3 பேரீச்சையின் முக்கியத்துவம்..!

காலையில் 3 பேரீச்சையைச் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கே இதன் மகத்துவம் என்ன என்பது புரிந்துவிடும். மேற்சொன்ன அற்புதங்கள் அனைத்துமே உங்களுக்கு எந்தவித பெரிய செலவும் இல்லாமலே இந்த பேரீச்சை எளிமையாகவும் அதே நேரம் இனிமையாகவும் தருகிறது. இதனால் பேரீச்சை மீது பெரும் இச்சை கொள்வீர்கள் என்பதில் ஐயமில்லை!