சக்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் பில்பிமி பழம்

கமியாஸ் அல்லது பில்பிமி (Kamias or bilimbi) என்ற பழத்தை நாம் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை போல அதிகமாக சாப்பிட்டு இருக்க மாட்டோம். ஆனால் இந்த பழம் மிகுந்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

இந்த பில்பிமி பழத்தில் விட்டமின் C, B, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்றவை அடங்கியுள்ளது.

பில்பிமி பழத்தின் மருத்துவ நன்மைகள் என்ன?

6 பில்பிமி பழங்களை தட்டி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் இரண்டு முறை குடித்தால், நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம்.

சிறிதளவு பெருஞ்சீரகம், சிறிதளவு பில்பிமி மற்றும் சர்க்கரை ஆகியவற்றை வேகவைத்த நீரை, காலையில் வெறும் வயிற்றில் பாதி அளவும், மாலையிலும் குடித்தால், இருமல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.

வாத நோயினால் ஏற்படும் வலிக்கு, சிறிதளவு பில்பிமி பழத்தின் இழைகளை மிருதுவாக அரைத்து, பாதிக்கப்பட்ட இடங்களில் 2-3 முறை தடவ வேண்டும்.

பில்பிமி பழத்தை அரைத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால், உடனடியாக குணமாகும். மேலும் இது வாய் புண்களையும் குணப்படுத்தும்.

பில்பிமி பழங்களில் அமில பொருட்கள் அதிகமாக உள்ளதால், இது முகப்பரு சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே இந்த பழத்தை பாதிக்கப்பட்ட தோல் மீது வைத்து சில நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

பில்பிமி பழத்தில் உள்ள அமில தன்மை புண்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது. எனவே சிறிதளவு நொறுக்கப்பட்ட பில்பிமி பழத்தை பாதிக்கப்பட்ட இடங்களில் வைக்க வேண்டும்.