இந்த ரெண்டு பழங்களையும் சேர்த்து சாப்பிட்டா அவ்வளவு தான்

பொதுவா நாம தினமும் சாப்பிடும்போது பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டால் உடல்நலத்திற்கு நல்லதுன்னு நமக்கு தெரியும். அதுவும் சின்ன பசங்களுக்கு காய்கறிகளும், பழங்களும் மிகுந்த நன்மைகளை தருகிறது. ஆனா சில பழங்களை சேர்த்துக் கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.

பல பழங்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமின்மையை ஏற்படுத்தும். இதனை தவர்த்துக் கொள்வது நல்லது. அப்படி எப்போதுமே சேர்த்து சாப்பிடக்கூடாத சில பழங்களை பற்றி இங்கே தெரிந்துக் கொள்வோம்.

ஆரஞ்சு + கேரட்

ஆரஞ்சு பழத்தையும், கேரட்டையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. இந்த ரெண்டையும்  சேர்த்து சாப்பிட்டால் நெஞ்செரிச்சலையும், சிறுநீரக பாதிப்பையும் உண்டாக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பப்பாளி + எலுமிச்சை

பப்பாளி பழத்தையும், எலுமிச்சை பழத்தையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. இப்படி சேர்த்து சாப்பிடுவது மோசமான சேர்க்கை ஆகும். இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் ரத்த சோகை மற்றும் ஹீமோக்ளோபின் சமச்சீரின்மை ஆகியவை உண்டாகும். குறிப்பாக இது குழந்தைகளுக்கு தான் அதிக தீங்கை உண்டாக்குகிறது.

ஆரஞ்சு + பால்

ஆரஞ்சு பழத்தையும் பாலையும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் செரிமானத்தை கடினமாக்குகிறது. அதுமட்டுமின்றி பல உடல் உபாதைகளையும் உண்டாக்குகிறது. பால் சேர்த்த உணவுகளை உண்ணும்போது அதில் ஆரஞ்சு பழத்தை சேர்த்தால், ஆரஞ்சு பழத்தில் உள்ள அமிலம், நமது உணவு செரிமானத்திற்கு பொறுப்பாக இருக்கும் ஸ்டார்ச்சை முழுவதுமாக அளித்து விடுகிறது. அதனால் பால் சேர்க்கப்பட்ட உணவில் ஆரஞ்சு பலத்தை சேர்ப்பதினால் அது உங்களது அஜீரணத்திற்கு வழிவகுக்கிறது. ஆகவே இதனை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ளுங்கள்.

கொய்யா + வாழைப்பழம்

கொய்யா பழத்தையும், வாழைப்பழத்தையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படி சேர்த்து சாப்பிட்டால் குமட்டல், அமில நோய், வாயு தொந்தரவு, தலைவலி போன்றவை ஏற்படும்.

காய்கறிகள் + பழங்கள்

காய்கறிகளையும், பழங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனென்றால் பலங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும், ஜீரணம் ஆவதற்கு அதிக நேரம் ஆகும். இவைகள் அதிக நேரம் நம் வயிற்றில் இருந்தால் வயிற்றிலேயே புளித்துப் போய் நச்சுக்களை வெளியாக்கும். இதனால் தொற்று பாதிப்பு, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் வயிற்று வலி ஏற்படும்.

அன்னாசிப்பழம் + பால்

அன்னாசிப் பழத்தையும், பாலையும் சேர்த்து சாப்பிடவே கூடாது. அன்னாசி பழத்தில் ப்ரோமிலைன் என்னும் கூறு இருக்கிறது. இது பாலுடன் இணைந்தால் உடலில் தொடர்ச்சியான தொந்தரவுகளை ஏற்படுத்தும். மேலும் தொற்று பாதிப்பு, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் வயிற்று வலி போன்றவற்றை உண்டாக்குவதால் இந்த சேர்க்கையை தவிர்த்துக் கொள்வது நன்று.

வாழைப்பழம் + புட்டிங்

வாழைப்பழத்தையும், புட்டிங்கையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் இப்படி சாப்பிடுவது வயிற்றில் செரிமான பிரச்னையை உண்டு பண்ணி உடலுக்கு கேடு விளைவிக்கும். குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உண்டாகும்.