எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுங்க, உடல்எடை ஏறாது

நம்மில் பலருக்கு அடிக்கடி ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று பயந்து உணவு உண்பதை அளவாகவே வைத்திருப்போம். ஆனால் நீங்கள் சாப்பிட்டாலும் உடல் எடையைக் கூட்டாத சில உணவுகள் இருக்கின்றன. அவைகள் என்னென்னவென்று இங்கே பார்க்கலாம்.

1. வேகவைத்த உருளைக்கிழங்கு

பலர் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருப்பதால் உருளைக்கிழங்கைத் தவிர்க்கிறார்கள், ஆனால் இதற்கு எந்த அவசியமும் இல்லை. உருளைக்கிழங்கு வறுத்தெடுக்காத வரை அவை மிகவும் சத்தானவை. அதைவிட, உருளைக்கிழங்கில் செரிமான அமைப்பில் கரையக்கூடிய நார் போல செயல்படும் எதிர்ப்பு மாவுச்சத்து உள்ளது. இது குறைந்த கலோரிகளுடன் முழுமையாக உணர உதவுகிறது.

உருளைக்கிழங்கை சமைத்து பின்னர் ஆறவைப்பது  எதிர்ப்பு மாவுச்சத்தின் அளவை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றை மீண்டும் மீண்டும் சூடு செய்து, ஆற வைப்பதால் அதில் உள்ள எதிர்ப்பு மாவுசத்து அதிகமாகிறது. ஆகவே உருளைக்கிழங்கை சமைத்து உண்ணுவது சுவையானவையாக மட்டுமில்லாமல், சத்தானதாகவும் ஆகிறது.

2. முழு முட்டைகள்

முட்டை

பொதுவாக முட்டைகள், அதிலும் குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருக்கள், மாரடைப்பைத் தூண்டும் கொழுப்பு என்று பரவலாக சொல்லப்படுகிறது. ஆனால் அவை சரியான அளவு கொழுப்பைக் கொண்டிருப்பதால், முட்டைகளை சாப்பிடுவது மோசமான கொழுப்பின் அளவை உயர்த்தாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாறாக, முட்டையில் முழுமையான புரதங்கள் இருக்கின்றன. அதாவது முட்டையில் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருக்கிறது.

காலையில் முட்டைகளை சாப்பிடுவது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஒரு குறிப்பிட்ட ஆய்வில், காலை உணவுக்கு முட்டை சாப்பிடுபவர்களால் அதிக எடையைக் குறைக்க முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் ஒரு சூப்பரான, நிறைவான உணவாகும். ஏனெனில் இதில் ஒரு டன் நார்ச்சத்து இருக்கிறது. இது சாதாரண உணவு தான், ஆனால் இதனுடன் பழங்கள், நட்ஸ், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து சுவையான உணவாக உட்கொள்ளலாம்.

ஓட்ஸில் பீட்டா குளுக்கன் எனப்படும் ஒரு வகை கரையாத நார்ச்சத்து உள்ளது. இது ரத்த கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் ஓட்ஸ் சாப்பிட்டால் அதிகம் பசி எடுப்பதை மட்டுப்படுத்துகிறது.

4. குழம்பு சார்ந்த சூப்கள்

சூப் ஒரு நிறைவான உணவு என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், ஆனால் அது உண்மையில் நிறைவான உணவாகும். இன்னும் சொல்லப்போனால், ஒரே மூலப்பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு திட உணவைவிட சூப் நிறைவான உணவு என்று ஆய்வு கூறுகிறது.

தினமும் சூப் குடிப்பதை பழக்கமாக்குங்கள், உங்களுக்கு தெரியாமலே நீங்கள் உங்கள் உடல் எடையை குறைப்பீர்கள். அதிலும் குழம்பு வகையான சூப்களை அருந்துங்கள்.

5. ஆப்பிள்கள்

செரிமானத்தைக் கட்டுப்படுத்தும் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து ஆப்பிளில் இருக்கிறது. மேலும் இதில் கலோரிகள் அதிகம் இல்லை. நீங்கள் ஆப்பிளை சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க கூடாது என்று விரும்பினால் முழு ஆப்பிளையும் சாப்பிடுங்கள்.

6. மீன் மற்றும் மெலிந்த இறைச்சி

மீன்

கார்போஹைட்ரேட் உணவுகளை விட புரத சத்து உணவுகள் தான் நிறைவானதாக இருக்கின்றது. அதனால் இறைச்சி சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் இறைச்சியில் கொழுப்பு இருப்பதால் மெல்லிய இறைச்சியாக சாப்பிட வேண்டும். மீன்களில் குறைந்த கொழுப்பும், அதிக புரத சத்தும், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் அதிகம் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

7. பாப்கார்ன்

பாப்கார்ன்

என்னாது பாப்கார்ன் சாப்பிடலாமா? என்று நீங்க ஆச்சர்யமாக பார்ப்பது புரிகிறது. ஆம், பாப்கார்னில் நார்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருக்கிறது. இருந்தாலும் மைக்ரோ ஓவனில் தயாரிக்கப்படும் பாப்கார்னை தவிர்த்தல் நலம்.

நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தாலோ, அல்லது இருக்கும் எடையை டூடுதல் ஆகிவிடக்கூடாது என்று நினைத்தாலோ மேலே சொன்ன ஏழு உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் புரத்தச்சத்து, நார்ச்சத்து, தண்ணீர், காற்று அதிகம் உள்ள, கொழுப்பு, கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.